Aadikondar andha vedikkai ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை

Composition: Aadikondar andha vedikkai

Composer: Muttutandavar

Ragam: Mayamalava Gaulai

Talam: Adi, Eka

Arohanam: SR1G3M1PD1N3S

Avarohanam: SN3D1PM1G3R1S

பல்லவி
ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண் ஆயிரம் வேண்டாமோ

அனுபல்லவி
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்                                 (ஆடிக்கொண்டார்…)

சரணம் 1

பங்கயச் சிலம்பைந்தாடப் பாதச் சலங்கைகள் கிண் கிணென்றாடப்
பொங்குமுடனே உரித்து உடுத்த புலித்தோல் அசைந்தாட செங்கையில் ஏந்திய மான் மழுவாட
செம்பொற்குழை கண் முயலகனாட
கங்கை இளம்பிறை செஞ்சடையாடக்
கனக சபை தனிலே                                 (ஆடிக்கொண்டார்)

சரணம் 2 – ஆற நவமணிமாலைகளாட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த் தொடையாடச்
சிதம்பரத் தேராட
பேரணி வேதியர் தில்லை மூவாயிரம்
பேர்களும் பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாடக்
கனக சபை தனிலே                                 (ஆடிக்கொண்டார்)

சரணம் 3

நிர்த்த கணபதி வேலர் நின்றாட
நின்றயன் மாலுடன் இந்திரன் ஆட
முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும் நின்றாட
மெய்ப் பத்தி மேவும் பதஞ்சலியாட
வியாக்ரம பாதரும் நந்தியும் ஆட
ஒப்பற்ற சிவகாமியம்மையும் கூடவே நின்றாட                                 (ஆடிக்கொண்டார்)

Leave a ReplyCancel reply